மதுரையில்எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாக அறிவித்த மத்திய அரசிற்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு பரிந்துரை செய்யப்பட்ட செங்கல்பட்டு, மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை, செங்கிப்பட்டி எனஐந்து இடங்களை மத்திய அரசு அண்மையில் பார்வையிட்டது. அதனை தொடர்ந்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருபப்பதைமத்திய அரசு உறுதிசெய்துள்ளது. இதுபற்றிய தகவல்களை முதல்வர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/images_10.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மதுரை தோப்பூர் பகுதியில் 1560 கோடி ரூபாயில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது. இந்த மருத்துவமனை சுமார் 750 படுக்கைகளை கொண்ட உயர்தர வசதி கொண்ட மருத்துவமனையாக கட்டப்படும் எனவும்இந்த மருத்துவமனையில் 100 எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள், 60 செவிலியர்கள் என பல மருத்துவப்பணிகள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தை பார்வையிட்ட வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மருத்துவமனை அமைவதற்கான அனைத்து வசதிகள் இங்கிருப்பதாகவும், மத்திய அரசு கேட்டதைவிட அதிகமாக 262 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)