Advertisment

எட்டு வழி சாலை - கருத்து கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி அளிக்க உத்தரவு

anbumani

Advertisment

சேலம் எட்டு வழி சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வர சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான நிலங்கள் கையப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி மக்களின் கருத்தை கேட்கும் கூட்டத்தை நடத்த, அந்த தொகுதியின் எம்.பி.யான அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். இதற்கு அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை போலீசார் நிராகரித்து விட்டனர். எனவே, போலீசாரின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களை கேட்கும் கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

anbumani salem chennai 8 lane road
இதையும் படியுங்கள்
Subscribe