gowthaman

திரைப்பட இயக்குனர் கவுதமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களுக்காக போராடும் செயற்பாட்டாளர்களை தொடர்ந்து, அடக்குமுறையை பயன்படுத்தி கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல்துறை எந்தவித காரணமின்றி, தனது வீட்டில் இருந்ததிரைப்படஇயக்குநர் வ. கௌதமனை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.

Advertisment

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக இயக்குநர் கவுதமன் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை குறித்து பேசிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். அதேபோல் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மற்றும் மாணவிவளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் போராட்டம் நடத்தும்தமிழ்செயற்பாட்டாளர்கள்மீது கைது நடவடிக்கை இருக்கும் எனஅன்றே சொன்னதுநக்கீரன்.