ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கில் எட்டு பேர் கைது! 

Eight arrested in businessman  case

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்த முகமது நிஜாம்(52), ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பீவி இவர்களுக்கு ராஜாமுகமது, சேக் அப்துல்காதர், பர்கானா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள் பர்கானாவிற்கு திருமணமான நிலையில் மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வந்துள்ளனர். முகமது நிஜாம் மற்றும் அவரது மனைவி ஆயிஷா பீவி இருவரும் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ந் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசவில் தொழுகையை முடித்துவிட்டு, வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து முகமது நிஜாம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் முகமது நிஜாமின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

Eight arrested in businessman  case

அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, இரத்தக்கரையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர். உயிர் பயத்திலிருந்த ஆயிஷாபீவி பீரோ சாவியை கொடுத்துள்ளார். சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 170 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கை கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவி மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்து பார்த்த உறவினர்கள் முகமது நிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டிற்குள் கட்டிக்கிடந்த ஆயிஷாபீவியை காப்பாற்றியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்தீபன் சம்பவ இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்க உத்தரவிட்டார். டி.எஸ்.பிகள் மனோகரன், அருள்மொழி அரசு, சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து சம்பவ இடத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி சரவணசுந்தர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்துவிட்டு 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Eight arrested in businessman  case

தனிப்படை போலீசார் தொடர்ந்து நடத்திய புலன் விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் அவர்களிடம் இருந்து 62 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், செல்போன்கள், கத்தி, கையுறைகளை கைப்பற்றியுள்ளனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

police puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe