Advertisment

'EIA விவகாரம்' தமிழில் மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி!- நடிகர் கார்த்தி!

கச

மத்திய அரசு வெளியிட்டுள்ள 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020' வரைவு குறித்து பலரும் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி பல்வேறு விழிப்புணர்வைஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி சில வாரங்களுக்கு முன்பு வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Advertisment

"நாடென்ப நாடா வளத்தன நடல்ல

நாட வளந்தரு நாடு”

என்று திருக்குளை உவமையாகக் குறிப்பிட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக அதிரடி காட்டினார். இவரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு நபர்களும் ஆதரவு தெரிவித்தினர். பா.ஜ.க. கட்சியினர் உள்ளிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் சிலர் மொழி பெயர்த்துள்ளனர். இந்நிலையில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி என்று கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

karthi pandiraj sathyaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe