இ.ஐ.ஏ. குறித்து ஆராய குழு... 2021 அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள்... -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

EIA committee to decide ... 2021 The people will decide who will get the throne - Chief Minister Edappadi Palanisamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு தினங்களாக கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிபணிகள் குறித்த ஆய்வினை திண்டுக்கல், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார். நேற்றுதிண்டுக்கல்லிலும்,மதுரையிலும் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று நெல்லையில்கரோனாதடுப்பு பணிகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறையில் இருகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இ-பாஸ்பெறுவதற்கான முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் இ-பாஸ்முறையைரத்து செய்ய வாய்ப்பில்லை என்றார். அதேபோல் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படியே முடிவெடுக்கப்படும் என தெரிவித்தமுதல்வர், இ.ஐ.ஏ. எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அமைத்த குழு தரும் அறிக்கை அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்தவிவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

முன்னாள் தி.மு.க தலைவர் கலைஞரின் இரண்டாவது நினைவு தினமான இன்றுதிமுக தலைவர் ஸ்டாலின் 2021-ல் தமிழகத்தில் ஆறாவது முறையாக தி.மு.க அரியணை ஏறும்எனசூளுரைத்திருந்தநிலையில், இது குறித்த கேள்விக்கு,

2021ல் யாரைஅரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள். தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என தமிழக மக்களே முடிவு செய்வார்கள் என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், தமிழகத்தில்கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

admk corona virus edappadi pazhaniswamy nellai
இதையும் படியுங்கள்
Subscribe