Advertisment

தயாராகும் எழும்பூர் இரயில் நிலையம்.. படங்கள்

ஏழாம் தேதி முதல் இரயில்கள் இயக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

நான்காம் கட்ட தளர்வுகளை கடந்த ஆகாஸ்ட் 31-ம் தேதி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில், தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வணிக வளாகங்கள், பெரிய கோவில்களை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

பேருந்து இயக்கத்திற்கு என நிலையான வழிகாட்டு நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்பொழுது இரயில்கள் இயக்கம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொது போக்குவரத்தில் குறைந்த கட்டணத்தில் நெடும் பயணம் என்பது இரயில்களில் மட்டுமே சாத்தியம். இந்தக் காரணத்தினால் மக்கள் அதிகமானோர் இரயில் போக்குவரத்து எப்பொழுது துவங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் வரும் 7ம் தேதி முதல் இரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து இன்று சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Egmore egmore station Train
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe