சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 9-40 மணிக்கு மதுரை செல்லும் பாண்டியன் அதிவிரைவு வண்டி புறப்படத் தயாரானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/egmore_0.jpg)
அப்போது, திடீரென ஒரு இளைஞர் அந்த ரயிலின் ஏ.சி பெட்டியின் மேற்கூரையில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். சட்டை அணியாமல் பேன்ட் மட்டும் அணிந்திருந்த அவரின் உடலில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டது.
உடனடியாக போலீஸார் அவரை சமாதனம் செய்து கீழே இறங்கிட வைத்தனர். இதன் காரணமாக அந்த ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இதற்கிடையே, அந்த இளைஞருக்கு ரயில் நிலையத்திலேயே முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனது பெயர் கணேசன் என்றும் வீடு மாதவரத்தில் உள்ளது என்றும் கூறியிருக்கிறார். "50 பேர் என்னை கொலை செய்ய வந்தார்கள். அதனால் தான் ரயில் மேல் ஏறி தப்பித்தேன்" என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us