Advertisment

நிவாரணப் பொருட்களை வழங்கிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்! (படங்கள்)

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக்காணப்பட்டது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

Advertisment

இந்த நிலையில், பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர். அதேபோல் சென்னை ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் உள்ள சென்னை நடுநிலைபள்ளியில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், வழக்கறிஞர் இ. பரந்தாமன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுப்பேட்டை, நரியாங்காடு, டிரான்ஸ்போர்ட் லேன் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அந்தப் பகுதிகளில் உள்ள 1000 (ஆயிரம் குடும்பங்களுக்கு) அரிசி, பருப்பு, சக்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, சேமியா, டீத்தூள்போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Advertisment

chennai flood Egmore relief
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe