
பாஜக தொண்டர்கள் சென்ற வாகனங்கள் மீது முட்டை, தக்காளி, வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் வாய்க்காலம் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாஜகவினரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்த பாஜகவின் தொண்டர்கள் தங்களது வாகனங்களில் சொந்த ஊருக்குத்திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கடையநல்லூர் அருகே அவர்கள் சென்ற வாகனங்களின் மீது முட்டை, தக்காளி, தண்ணீர் பாட்டில்ஆகியவை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து பாஜக தொண்டர்களை அனுப்பி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)