Egg ranged in the company

Advertisment

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துமாவு, பருப்பு மற்றும் சத்துணவு முட்டை வழங்கி வருகிறது கிறிஸ்டி பிரைடு என்ற நிறுவனம். இது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டது.

இந்நிறுவனம் முட்டை மற்றும் பருப்பு, மாவு சப்ளையில் ஏராளமான முறைகேடு செய்து வந்துள்ளது. இதன் மூலம் பல கோடிகள் வருமானம் ஈட்டியுள்ளது. கணக்கில் காட்டப்படாத இந்த வருமானத்தை கவனித்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 5ந் தேதி இந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் வீடுகள் குடோன்கள் என சென்னை, பெங்களூர், கோவை, சேலம், நாமக்கல் திருச்செங்கோடு பல ஊர்களில் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டில் இறங்கினார்கள்.

இதில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் சொத்துக்கள், பொருட்கள், கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, இன்று இரண்டாம் நாளாக ரெய்டு தொடர்கிறது.