Advertisment

‘பால் விநியோகத்தில் பாதிப்பு?’ - ஆவின் விளக்கம்!

'Effect on milk supply?' - A's explanation

Advertisment

பொதுமக்களுக்குப் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புமில்லை எனத்திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இன்று (29.05.2024) ஒப்பந்ததாரர்களுக்குக் கடந்த 4 மாதங்களாக பால் விநியோக வழித்தட வாகன வாடகை தொகையினை வழங்கவில்லை எனவும், அதனால் பால் விநியோக வழித்தட வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், உண்மைக்குப் புறம்பான பொய்யான பரப்புரைகளை திருச்சி ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வருகின்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு 4.50 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அவற்றுள் 1.50 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக தயார் செய்து உள்ளுர் விற்பனை செய்தும், 3 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றது. பால் வழங்கும் விவசாயிகளுக்கு பால்பணம் தங்குதடையின்றி பத்து தினங்களுக்கு ஒருமுறை நிலுவையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. கேன் பால் ஏற்றி வரும் பால் சேகரிப்பு ஒப்பந்த வாகனங்கள், பால்குளிர்வூட்டு நிலையங்களில் பால் சேகரிக்கும் ஒப்பந்த டேங்கர் வாகனங்கள் மற்றும் பால் பாக்கெட்டு விநியோகம் செய்யும் ஒப்பந்த வாகனங்கள் ஆகியவற்றிற்கான வண்டி வாடகை தொகை 15 தினங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகின்றது.

பால் பாக்கெட் விநியோகத்தினை நெறிபடுத்தும் வண்ணம் பகல் நேரங்களில் பெண் அலுவலர்கள் கொண்ட குழுவும், இரவில் ஆண் அலுவலர்கள் கொண்ட குழுவும். பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டு பால் விநியோக வழித்தட வாகனங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஒன்றிய நலன் பேணப்பட்டு வருகிறது. மேலும் பால் விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரருக்குரிய வாடகை தொகை 15 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மாத பட்டியல் தொகையினை நிலுவையில் வைத்து அனுமதிக்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ள நிலையில் இன்று ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்த செய்திகளில் விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வாடகை தொகையினை அனுமதிக்கப்படவில்லை என்பது பொய்யான பரப்புரையாகும்.

Advertisment

ஒரு மாதம் மட்டுமே விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வாடகைத்தொகை நிலுவையில் உள்ளது. மேலும் வாகன ஒப்பந்ததாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. எனவே பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத்தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, உண்மைக்கு மாறான செய்திகள் வதந்திகள் திருச்சி ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுவருவதை திருச்சி ஆவின் நிர்வாகம் மறுக்கின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aavin trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe