ADVERTISEMENT

மெரினா அருகே ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணி! ( படங்கள் )

07:45 PM May 20, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சென்னை மெரினா கடற்கரை அருகே இலங்கை போரில் இறந்த ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான்பாகவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன. ஆனால், மெரினா பொழுதுபோக்கு இடம். இங்கு போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று ஐகோர்ட் உத்தரவை காரணம் காட்டி காவல்துரை அனுமதி மறுத்தது.

தடையை மீறி கூட்டம் கூடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதையடுத்து திருவல்லிக்கேணி பாரதிசாலையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் தயாரானது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன் ஆய்வு செய்தார். நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் பாரதி சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை வரை பேரணியாக சென்றனர். இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான்பாகவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT