Skip to main content

வட்டார கல்வி அலுவலர் பணி- தேர்வு மைய விவரம் வெளியீடு!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித்தேர்வு மையங்களின் பெயர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். 


இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித்தேர்வு மையங்களின் பெயர், முகவரி அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தள பக்கத்திற்கு என்று தங்களின் User ID மற்றும் Password- ஐ உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள Admit Card- ஐ தேர்வு நாளன்று கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
 

Educational Officer in Elementary Education department exam conducted trb

வரும் 14- ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு 10- ஆம் தேதி அனுமதிச் சீட்டு (Admit Card) வெளியிடப்படும். 15- ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு 11- ஆம் தேதி அனுமதிச் சீட்டு வெளியிடப்படும். 16- ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு 12- ஆம் தேதி அனுமதிச் சீட்டு வெளியிடப்படும்." இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவிகள் மத்தியில் தேர்வு எழுதத் தயாரான மாணவர் மயக்கம்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

bihar nalanda district twelth student exam centre fear

 

பீகாரில் மாணவிகள் மத்தியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்ததால் மாணவர் ஒருவர் தேர்வு அறையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பீஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மனிஷ் சங்கர் என்பவர் கடந்த 1 ஆம் தேதி தேர்வு எழுத சுந்தர்கர் பகுதியில் உள்ள பிரில்லியண்ட் கான்வெண்ட் பள்ளிக்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, பள்ளி வளாகத்தில் சுமார் 500 மாணவிகள் வரை குழுமியிருந்துள்ளனர். அங்கு இவர் மட்டுமே மாணவர் என்பதால் இதனைக் கண்டு மனிஷ் சங்கர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் தேர்வு எழுதும் அறைக்குச் சென்றபோது, அங்கு 50 மாணவிகள் அமர்ந்து தேர்வு எழுத காத்திருந்தனர்.

 

மாணவிகள் மத்தியில் மனிஷ் மட்டுமே தனி ஒரு மாணவராகத் தேர்வு எழுத தனது இருக்கையில் அமர்ந்தார். இச்சூழலில் மனிஷ் மிகவும் பதற்றமடைந்து, உடல் நடுங்கிய நிலையில் தேர்வு அறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். தேர்வு அறையில் இருந்து மனிஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மனிஷ் தனது தேர்வுக்கூட விண்ணப்பத்தில் பாலினத்தை தேர்வு செய்வதில் ஆண் என்பதற்குப் பதிலாக பெண் என மாற்றி பதிவு செய்து விட்டதால், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு கூடத்தில் இவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

எஸ்.ஐ தேர்வு- தேர்வு மையங்களை கண்டறிய சுற்றறிக்கை!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

எஸ்.ஐ தேர்வுக்கு தேவையான மையங்களை கண்டறிய காவல்துறை ஐ.ஜி.வித்யா ஜெயந்த் குல்கர்னி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 
 

எஸ்.ஐ தேர்வுக்கு தேவையான மையங்களை கண்டறிய, சேலம், கோவை, சென்னை, திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லை மாநகர காவல் ஆணையர்களுக்கு உத்தரவு. அதேபோல் அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.  
 

tamilnadu police sub inspector exam ig circular issued all commissioners

அந்த சுற்றறிக்கையில், 100 பேர் எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி, கல்லூரிகளை கண்டறிய உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி துறைசார்ந்த பிரிவினருக்கும், ஜனவரி 12  ஆம் தேதியில் பொதுப்பிரிவினருக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.