கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உதவி! - ஊதியத்தை வழங்கும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.!

Educational help on the kalaingar birthday! - Thangapandian MLA who pays the salary!

இராஜபாளையம் தொகுதியில் டாக்டர் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, இத்தொகுதியில் உள்ள 300 மாற்றுத் திறனாளிகளுக்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், 8, 9, மற்றும் 10-வது மாத ஊதியத்திலிருந்து 3,15,000 ரூபாய் மதிப்பீட்டில் தலா ரூ.1000 நிதியுதவி அளித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. “கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மாதம் முழுவதும் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. இனி எனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து, தொகுதியில் உயர்கல்வி பயிலவிருக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களில், அந்தந்தப் பகுதியிலுள்ள கிளைச் செயலாளர், வார்டு செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களின் பரிந்துரையின்படி, 25 மாணவ, மாணவியரைத் தேர்வு செய்து, அவர்களின் படிப்புச் செலவை முழுவதும் ஏற்கிறேன்” என்றார்.

Rajapalayam
இதையும் படியுங்கள்
Subscribe