ADVERTISEMENT

'ஜூன் 15- ஆம் தேதி முதல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு'- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

12:17 PM May 19, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சென்னை தலைமைச் செயலகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT


ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஜூன் 1- ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மே 31- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. ஜூன் 15- ஆம் தேதி வரை ஜூன் 25- ஆம் தேதி வரை 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தமிழகம் முழுவதும் 15,690 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மார்ச்- 24 ஆம் தேதி நடைபெற்ற 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு ஜூன் 18- ஆம் தேதி மறு தேர்வு நடக்கிறது" என்றார்.

அதனைத் தொடர்ந்து 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடக்கிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

ஜூன் 15-ம் தேதி மொழிப்பாடம்
ஜூன் 17-ம் தேதி ஆங்கிலப்பாடம்
ஜூன் 19-ம் தேதி கணிதம்
ஜூன் 20-ம் தேதி மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)
ஜூன் 22-ம் தேதி அறிவியல்
ஜூன் 24-ம் தேதி சமூக அறிவியல்
ஜூன் 25-ம் தேதி தொழில்கல்வி தேர்வு



மேலும் 11- ஆம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு ஜூன் 16- ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 16- ஆம் தேதி 11- ஆம் வகுப்பு வேதியியல், புவியியல், கணிக்கியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT