Advertisment

தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்

education minister answer diwali holiday question

மாவட்ட மக்களுக்கான அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் குறித்தான ஆலோசனை கூட்டம் இன்று (22/10/2022) திருச்சி கலையரங்கம் வணிக வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்,அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அமைச்சர்கள்பதிலளித்தனர்.

Advertisment

அப்போது அமைச்சர் கே.என் நேருவிடம், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “இந்த வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அதனால் எந்தவித கருத்தும் கூற முடியாது" என பதிலளித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், தீபாவளிக்கு மறுநாள் 25 ஆம் தேதி புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும்விடுமுறை அளிக்கப்படுமாஎன கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "வரும்25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். எனவே இந்த கோரிக்கைதமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்றார்.

schools
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe