Advertisment

செட்டிகுளம் அரசுப் பள்ளி சார்பில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்..! 

Education Development Day Celebration on behalf of Chettikulam Government School ..!

முன்னாள் முதல்வர் காமராஜரின் 119வது பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

Advertisment

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் உருவப் படத்திற்குத்தலைமையாசிரியர் நாகமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உதவி தலைமையாசிரியர் மணி, இராதாகிருஷ்ணன், சக ஆசிரியர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்றத் தலைவர் கலா தங்கராசு, புரவலர் திட்ட உறுப்பினர் சொரணக்குமார், விஜய்அரவிந்த, சத்தியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வேம்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் வேம்பு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். அதே பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமும் நடைபெற்றது.

Advertisment

kamarajar Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe