Editor and Publisher of Nakkheeran Ambassador for Peace award upf

யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் (Universal Peace Federation) என்ற தொண்டு நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் லண்டனைதலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச தொண்டு நிறுவனம் இது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் 'அமைதிக்கான தூதர்' விருதுகளை வழங்கி வருகிறது.

Advertisment

dddd

அந்த வகையில், நடப்பாண்டிற்கான 'அமைதிக்கான தூதர்' விருதுக்கு (Ambassador for Peace) நக்கீரன் ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங்காவலரான டாக்டர். அப்துல் பாசித் சையத், நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்தியதையும், துணிச்சலான முயற்சிகளை எடுத்த 'நக்கீரன் ஆசிரியர்' குறித்து இந்த அமைப்பின் செயலாளர் ரோபின் மார்ஷிடம் தெரிவித்திருந்தார்.

Advertisment

dddd

இதையடுத்து, நக்கீரன் ஆசிரியருக்கு'அமைதிக்கான தூதர்' விருது வழங்க முடிவு செய்த யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன், அதற்கான அழைப்பு கடிதத்தை நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கியிருந்தது.

 Editor and Publisher of Nakkheeran Ambassador for Peace award upf

அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைமையிடத்தில் இன்று (23/03/2022) பிற்பகல் 01.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு 'அமைதிக்கான தூதர்' விருது வழங்கப்பட்டது.

Advertisment

dddd

பிபிசி - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திருமதி ரீதா பெய்ன் இவ்விருதை வழங்கினார்.