2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றது.

Advertisment

edappady palanimsay in tamilnadu secretariat

Advertisment

மூன்றாவது நாளான இன்று (18/02/2020) பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி,

பொய்யை சொல்லி சொல்லி மக்களிடம் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், நாங்கள் தீர்வு காண்கிறோம். தமிழ் நாட்டில் வாழுகின்ற, தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டிருகிறார்கள் என்று சுட்டிக் காட்டுங்கள் நாங்கள் அதற்கு பதில் சொல்லுகிறோம்.

அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி, நாடகமாடி,தவறான அவதூறான செய்திகளை சொல்லி இன்றைக்கு ஒரு அமைதியாக இருந்த மாநிலத்தை இன்றைக்கு குந்தகம் ஏற்படுகின்ற நிலையில்மாற்றியுள்ளீர்கள்.உங்களுக்கு எல்லாம் என்ன சொல்லுங்க... யார் பாதிக்கப்பட்டார்கள்விளக்கம் சொல்லுங்க,நான் பதில் சொல்லுகிறேன் எனமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று ஆவேசமாக பேசினார்இபிஎஸ்.