முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ஒருவரின் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் தீடீர் சோதனையால் ஈரோட்டில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

EPS relative organisation raided

ஈரோடு பெருந்துறை சாலையில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக சக்தி மஹால், ஆர்.ஆர் துளசி பில்டர்ஸ், டிராவல்ஸ் போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பணிகள் ஒப்பந்தம் எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேம்பாலம், சாலை விரிவாக்கம், கட்டிடங்கள் என பல கட்டுமானங்களை செய்து வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் கோவையில் இருந்து வந்த 20 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சத்தியமூர்த்தியின் கட்டுமான நிறுவன அலுவலகம், திருமண மண்டபம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் போன்ற அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனார். கான்ட்ராக்டர் சத்தியமூர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினர் என்பதால் இது அரசியல் மட்டத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.