Skip to main content

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும்: எடப்பாடி நம்பிக்கை

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 


தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

 

e


சேலத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்திருந்தார். நேரு கலையரங்கில் நடந்த இவ்விழாவில், நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 


பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது: அதிமுக தலைமையில் மக்களவை தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்து இருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி என்பது மாறிக்கொண்டுதான் இருக்கிறது. கூட்டணி என்பது வேறு; கட்சிகளின் கொள்கை என்பது வேறு. தமிழகத்தில் அதிமுக அரசு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 


பாஜக, பாமக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீடும் முடிந்துள்ளன. மேலும், பல கட்சிகளுடன் பேசி வருகிறோம். டிடிவி தினகரன் அவருடைய கட்சியை இதுவரை பதிவு செய்தாரா? இல்லையா? என்று கூட தெரியவில்லை. அவர் 534 தொகுதிகளிலும் போட்டியிடட்டும். 


அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பேச்சுவார்த்தைக்கு பின்னரே தெரியவரும். தேமுதிக உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிவு பெற்றுவிடும். தேமுதிக இணைந்தவுடன் எங்கள் கூட்டணி மெகா கூட்டணியாக அமையும். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். வலுவான கூட்டணி அமைந்தால்தான் வளர்ச்சிப் பணிகள் செய்து தர முடியும்.

 
இந்திய அளவில் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம். எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இப்போது எதுவும் கூற முடியாது. மாயமான முகிலன் குறித்து அவருடைய குடும்பத்தினர் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக்கூடாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

    இந்த அரசை யாரும்  தொட்டு கூட பார்க்க  முடியாது!  சவால் விடும் முதல்வர்  எடப்பாடி!

Published on 07/04/2019 | Edited on 07/04/2019

 


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்  கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் ஜோதி முத்து போட்டியிடுகிறார். அதுபோல் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதியில் அதிமுக சார்பில் தேன்மொழி போட்டியிடுகிறார்.  இந்த இரு வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வத்தலகுண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்பொழுது கூடியிருந்த வாக்காள மக்களிடம் ஜோதி முத்துவுக்கு மாம்பழத்துக்கும் தேன்மொழி இரட்டை இலை சின்னத்துக்கும் ஓட்டு போடச் சொல்லி வலியுறுத்தினார்.

 

e


அதன் பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு சுமார் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.  எனவே நமது நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது . நாடு பாதுகாப்புக்காக இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்.  அதேபோல் திறமையான பிரதமர் ஆட்சியில் இருக்க வேண்டும். எனவே மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்.

 

e

 

அதற்காக நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் . அதுபோல் சதிகாரர்களின் சூழ்ச்சியால் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.  இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு வெளியே சென்று எம்எல்ஏ பதவிகளை இழந்தனர்.  எனவே நிலக்கோட்டை இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் தேன்மொழிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.  நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதல் முதல் அமைச்சராக இருக்கிறார்.

 


 அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு வரமுடியும்.  நான் கிளைச் செயலாளராக கட்சி பணியைத் தொடங்கி படிப்படியாக இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.  ஆனால் மு. க. ஸ்டாலின் அவருடைய அப்பா தயவால் பதவிக்கு வந்தார்.  விவசாயி முதல்-அமைச்சராக இருப்பதால் மு. க. ஸ்டாலின் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.    விவசாயி தானே ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைத்தார்.  ஆனால் அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை.  நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்.  இது மக்களின் அரசு அதிமுக அரசை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.  மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

 

  தமிழகத்தில் ஊழல் நடப்பதாக மு க ஸ்டாலின் கூறி வருகிறார்.  ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை.  அழகு நிலையம் நடத்தும் சென்னை திமுக பிரமுகர்  தாக்குகிறார் மற்றொரு திமுக பிரமுகர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்.  ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுக்கிறார்கள் மறுநாள் சென்று ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்.  ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தில் ஆட்சியிலிருப்பது அதிமுக நான் முதலமைச்சர் நாங்கள் தானே திட்டங்களை கொண்டு வர முடியும்.

 

 ஸ்டாலின் எப்படி திட்டங்களைக் கொண்டு வருவார்.  தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்திற்காக ஸ்டாலின் நாடகம் போடுகிறார்.  இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி வர வேண்டும்.  அதன் மூலம் தமிழகத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவர முடியும் எனவே வாக்காள மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

 
இந்த முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தின் கபோது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

Next Story

ஓட்டுக் கேட்க எடப்பாடி செல்லும் சாலையும்.. ஓட்டு போடும் வாக்காளர் செல்லும் சாலையும்..      

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

 

    தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று கூட்டணி அமைத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது இல்லாமல் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனறு தனிக்கட்சிகளும், பலர் சுயேட்சைகளாகவும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மக்களே எஜமானர்கள் என்று அவர்களை தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பெரிய கட்சி தலைவர்கள் செல்லும் இடங்களுக்கு தலைக்கு ரூ. 200 கொடுத்து கூட்டத்தை கூட்டி இந்தப் படை போதுமா.. என்று எதிர் அணிகளுக்கு கேட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் அதே ஆட்களை தான் அழைத்துச் செல்கிறார்கள் என்பது ஓட்டுப் போடும் அந்த மக்களுக்கு நல்லாவே தெரிகிறது.

 

r

    

இந்த நிலையில் தான் முன்பு ஜெ. முதல்வராக இருந்த போது அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள சாலைகளை கண்ணாடி போல சீரமைப்பதும், வேகத்தடைகளை உடைத்து தடையில்லா சாலைகளை ஏற்படுத்துவதும் அவர் நின்று பேசும் இடத்தைச் சுற்றி சாலை ஓரங்களில் கிடக்கும் மண்ணை கூட்டி அள்ளுவதும் வழக்கம். ஆனால் எதிர்கட்சிகள் வழக்கமான சாலைகளையே பயன்படுத்த வேண்டும்.


    இப்படித் தான் தற்போதைய தேர்தலில் மாஜி முதல்வர் ஜெ. வை மிஞ்சும் அளவுக்கு தற்போதைய முதல்வர் எடப்பாடிக்காக நெடுஞ்சாலைத் துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி மட்டுமல்ல துணை முதல்வர் ஒ.பி.எஸ். செல்லும் சாலைகளும் அப்படித்தான்.

 

r


    இவர்கள் ஓட்டுக் கேட்டு வருவதற்கு முதல் நாளில் அவர்கள் பயணிக்கும் சாலையில் உள்ள சிறு சிறு பள்ளங்களும் சீரமைக்கப்படுவதுடன் சாலை ஓரங்களை பொக்கலின் வைத்து சமன் செய்து கிராவல் கொட்டி மேடு பள்ளங்கள் நிரப்பப்படுவதுடன்  வேகத்தடைகளும் அகற்றப்பட்டு வருகிறது. முதல்வர், துணை முதல்வர் கான்வாய்களில் செல்லும் போது குலுங்காமல் செல்ல தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள் நெடுஞ்சாலைப் பணியாளர்கள். இதற்காக சுமார் ரூ. 100 கோடி வரை தமிழகம் முழுவதும் செலவிடப்படும் என்று ரகசியத்தையும் உடைக்கிறார்கள். 


    ஓட்டுக் கேட்க வரும் இவர்கள் செல்லும் சாலை இப்படி பளபளக்கிறது என்றால் இவர்களை இந்த உயர்ந்த இடத்தில் அமர வைக்க ஓட்டுப் போட்ட மக்கள் எந்த மாதிரியான சாலையில் பயனிக்கிறார்கள் என்றால்.. அடிக்கடி விழுந்து செல்லும் மரண குழிகள் உள்ள சாலைகளில் தான் செல்கிறார்கள்.

 

r


    ஓட்டுப் போட்ட.. இனியும் ஓட்டுப் போட காத்திருக்கும் வாக்காளர்கள் சொல்வது.. ஒவ்வொரு முறை ஓட்டுக் கேட்க வரும் போதும் அரசியல்வாதிகள் சொல்வது இந்த கிராம சாலைகளையும் சீரமைத்து கொடுப்போம் என்று சொல்லிவிட்டு போவார்கள். அடுத்த தேர்தலுக்கும் வருவார்கள்.  அதே சாலையில் நின்று மறுபடியும் வாக்குறுதி கொடுப்பார்கள். இது தான் வழக்கம். ஆனால் நாங்கள் ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ, எம்.பி, முதல்வர் ஆனவங்க போறதுக்கு மட்டும் எந்த திட்ட மதிப்பீடும் இல்லாம அவசரமா நிதி ஒதுக்கி ரோடு போடுவாங்க. ஆனா காலங்காலமா நாங்க போற சாலையை சீரமைத்துக் கொடுங்கன்னு போராட்டம் கூட நடத்தினாலும் நிதி இல்லன்னு சொல்வாங்க. 


    இப்ப எடப்பாடி சுற்றுப்பயணம் செய்ற சாலைகள் எப்படி சீரமைக்கிறாங்க. அவருக்கு ஓட்டுப் போட்டு முதல்வர் ஆக்கின நாங்க போற சாலை எப்படி இருக்கு பாருங்க. ஒரே தொகுதியில் எடப்பாடி செல்லாத ஊர்களுக்கு போகும் சாலைகள் இன்னும் அதே நிலை தான். அதனால தமிழ்நாட்ல இருக்கிற எல்லா சாலைகளிலும் முதல்வர் ஓட்டுக் கேட்க வந்தால் எங்க ஊரு சாலைகளும் சீராகுமே என்கின்றனர் ஆதங்கமாக.