Skip to main content

உண்ணாவிரதத்தை முடித்த எடப்பாடி; அனைவரும் ரிலீஸ்...

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

 Edappadi who ends his fast.. everyone is released

 

சென்னையில் தமிழக அரசைக் கண்டித்தும், சட்டசபை மரபுகளை மீறியதாக சபாநாயகரைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்திருந்த நிலையில் தற்பொழுது அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதற்காக அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறை அவர்கள் அனைவரையும் சென்னை எழும்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரிடம் அனைத்து ஆதாரங்களையும் முழுமையாக கொடுத்துள்ளோம். ஓபிஎஸ், வை.ஜெயந்தன், மனோஜ் ஆகியோர் நீக்கப்பட்டதற்கும் ஆதாரம் கொடுத்துள்ளோம். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. தீர்மானம் செல்லும் எனும்போது அவர் நீக்கப்பட்டதும் செல்லும். இதுதான் ஜனநாயகப் படுகொலை. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என தெரிவித்திருந்தார். தற்போது எடப்பாடி தரப்பு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்