Advertisment

திருப்பதியில் எடப்பாடி

Edappadi in Tirupati

Advertisment

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முட்டல் மோதலில் தொடங்கி வழக்குகள் என தொடர்ந்து தற்பொழுது எடப்பாடி பழனிசாமி வசம் கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. மறுபுறம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என ஓபிஎஸ் தரப்பு மாநாடு, டிடிவியுடன் சந்திப்பு என இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த கோவில் பிரகாரங்களைச் சுற்றிவந்த எடப்பாடி தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டார்.

Tirupati
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe