
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான வாதங்கள் ஏற்பட்டு தற்பொழுது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்து கிடக்கும் சூழலில் நேற்று மாலை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே பழனிசாமி தரப்பினர் எதிர்க்கட்சிதுணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு கொடுத்திருந்தனர். அது தொடர்பாகத்தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துகோரிக்கை வைத்திருந்தனர்.
தற்பொழுது வரை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அங்கம் வகிக்கும் நிலையில், இன்று மீண்டும் சபாநாயகரை எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் சந்திக்க இருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இன்று மீண்டும் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து தங்களது தரப்பை முறையிட இருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow Us