Advertisment

'கரோனாவை மிகச் சரியாகக் கையாண்டுள்ளோம்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் (படங்கள்)   

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை அந்தந்த கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. அதேபோல் அதிமுகவும்தேர்தல் பரப்புரையைத்தொடங்கியுள்ளது. இன்று (30/12/2020) திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வாளாடி பகுதிக்குவந்துசேர்ந்த தமிழக முதல்வர், மக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

Advertisment

அந்தப் பகுதியில் அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் இந்தப் பகுதியில் அதிகம் இருந்ததால் முதல்வர் மிகுந்த உற்சாகத்தோடு பேசினார். அதிமுகவின் தெற்கு மாவட்டச் செயலாளர் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களைத் திரட்டியிருந்தார்.மக்கள் கூட்டத்தைப் பார்த்த முதல்வர் மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, "தமிழக அரசு தற்பொழுதையதிட்டங்களை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொடரும். அதிமுகநல்லாட்சி கொடுக்கும்" என உறுதியளித்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார், அப்பொழுது,"இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் எடுப்பதில்லை. கரோனாவை மிகச்சரியாகக்கையாண்டு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு காணொலி காட்சியில் - அப்போதுகூட கூலிங் கிளாஸ் மற்றும் கையுறையோடுதான் பேசுகிறார்.

இன்று தமிழகத்தில் கரோனாநோய்ப் பரவல் 1,000-க்கும் கீழே வந்துள்ளது. இந்த அளவிற்கு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். தமிழகத்தில் இயல்புநிலைதிரும்பிவருகிறது. ஸ்டாலின் அவர்களே கேரளா, டெல்லி மற்றும் பல மாநிலங்களைப் பாருங்க. ஆனால், தமிழகத்தில் 1,000-க்கும் கீழே நோய்த்தொற்று அளவைக் கொண்டு வந்துள்ளோம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. பிரதமர் வீட்டுவசதிதிட்டத்தில் கூடுதலாக 70 ஆயிரம் கொடுக்க வழிவகை செய்துள்ளோம். இப்படி எல்லா வகையிலும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்" என்றார்.

election campaign thiruchy admk edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe