
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்த மசோதா மீது முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநருக்கு அழுத்தம் தராத ஆளும் கட்சியான அதிமுக அரசை கண்டித்தும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து உடனடியாக ஆளுநர் முடிவு எடுக்கக் கோரியும் திமுக தலைவர் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஸ்டாலின் ஈடுபடுகிறார்.நீட் தேர்வை கொண்டுவந்து துரோகம் இழைத்தது திமுக காங்கிரஸ் தான் என தெரிவித்துள்ளார்.