Advertisment

''ஊர்ந்துபோய் முதல்வர் பதவி வாங்க நான் பாம்பா பல்லியா...'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு! 

edappadi pazhaniswamy election campaign

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

புவனகிரியில் அதிமுக வேட்பாளர் அருள்மொழித்தேவனைஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''நான் ஊர்ந்துபோய் முதல்வர் பதவி வாங்கினேன் என ஸ்டாலின் விமர்சிக்கிறார். முதல்வர் பதவியை வாங்க யாராவது ஊர்ந்து போவார்களா? நான் என்ன பாம்பா பல்லியா... மனுஷன் ஐயா. நடந்துபோய்தான் முதல்வர் பதவியேற்றேன். ஒரே எரிச்சல், தாங்கிக்க முடியல. ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக உடைந்துவிடும், நாம் முதல்வர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். இப்படி ஒரு விவசாயி வருவான் என்று அவர்களுக்குத் தெரியல'' என்றார்.

election campaign edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe