Edappadi Palaniswami's arrest is caused by a poster stuck on it!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய ஒன்றிய தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகர் பகுதிகளில் இந்த சுவர் ஒட்டிகளை ஒட்டியுள்ளார்.

Advertisment

அந்த போஸ்டரில், ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வரான, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தண்ணீர் பாட்டில் வீசி தகாத வார்த்தைகளைப் பேசி அ.தி.மு.க. சட்டத்திற்கு எதிராக பொதுக்குழுவிற்கு குந்தகம் விளைவித்து, ஒன்றரைக் கோடி தொண்டர்களின் சொத்தான தலைமைக் கழகத்தை சூறையாடிய கயவர்களையும், உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணமான சுயநலவாதிகள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை கைது செய்! அம்மாவின் உண்மை விசுவாசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டரால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.