
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (22/07/2022) டெல்லி செல்லவுள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்காக, மத்திய அரசு சார்பில் பிரியாவிடைக் கொடுக்கப்படுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மற்ற மத்திய அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (22/07/2022) செல்லவிருக்கிறார். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவியேற்றவுடன் முதன் முறையாக டெல்லி செல்லவுள்ள எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அனுமதிக் கிடைத்தால் பிரதமர் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.