முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமானஎடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது விரைவில் கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்தும், அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.