/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_239.jpg)
கொடநாடு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த கொடநாடு கொள்ளை கொலை வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கிறது. அவரை விசாரியுங்கள் என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில்தான் கொடநாடு பங்களாவிலிருந்து 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 5 பைகளை எடுத்து வந்து இரண்டு பைகளைச் சேலத்திலும், 3 பைகளை சங்ககிரியிலும் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கொடுத்துள்ளார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச்சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் கொடநாடு குறித்து கேள்வி கேட்டதற்கு, “இந்த மாதிரி நீங்கள் கேட்கவே கூடாது.யாரோ ஒருவர் சொல்லியதை வைத்து கொடநாடு கொலை, கொள்ளைவழக்கில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்று கேள்வி கேட்கவோ, பத்திரிகையில் செய்து போடுவதோ கூடாது என்றார். அந்த சம்பவத்தை சட்ட ரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்தது. ஆனால் வேண்டுமென்றே இந்த ஆட்சியாளர்கள் திரித்து அவர்களுக்குச் சாதகமாகச் சூழ்ச்சி செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது யாரோ ஒருவர் சொன்னதை வைத்து நீங்கள் கேள்வி கேட்கலாமா? என் மீது குற்றம் சொன்னவர் எப்படிப்பட்டவர், அவர் மீது பல வழக்குகள் இருக்கிறது. இதே அரசு அவரை மூன்று மாதம் சிறையில் அடைத்தது. இந்த நிலையில் நேற்று பேட்டி கொடுத்த தனபால், நில அபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் வந்திருக்கிறார்.
கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநர் அல்ல; அவர் சசிகலாவின் ஓட்டுநர். இனிமேல் யாராவது ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று சொன்னால் வழக்கு போடுவேன். அவர் ஒருநாள் கூட ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டியதே இல்லை. அப்படி செய்தி வெளியிடுவதால் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது. இனி அப்படி செய்தி வெளியிட்டாலோ, சொன்னாலோ நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)