அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக இன்று காலை ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தினுள் நுழைந்தனர்.அங்குகதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்து ஒ.பி.எஸ்ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தினுள் நுழைந்தனர். அதன்பின் ஓ.பி.எஸும்அங்கு விரைந்தார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடியின்ஆதரவளர்களானவிருகைரவி, வேளச்சேரி அசோக்,சோழிங்கநல்லூர்கந்தன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். மேலும்அவர்கள் ஓ.பி.எஸ்-ஐ வெளியேறச் சொல்லி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் அவர்கள் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில், அதிமுகமகளிர்அணி செயலாளர் மஞ்சுளா,ஜெயதேவிஆகியோர் தாக்கப்பட்டனர். அதற்குள் அங்கு விரைந்த காவல்துறையினர்அவர்களைதடுத்து நிறுத்தி காயம் ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகுவருவாய்கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிமுகஅலுவலகத்திற்குசீல் வைத்தனர்.
இந்ததகராற்றில்,விருகைரவி, அசோக், கந்தன்ஆகியோருக்குலேசான காயம்ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்களும் சென்னைராஜீகாந்திஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள்உட்படகாயம் அடைந்த தனது ஆதரவாளர்களை இ.பி.எஸ். இன்றுமருத்துவமனைக்குசென்று நலம் விசாரித்தார்.