Edappadi Palaniswami at the hospital

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Advertisment

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சென்னைக்கும் சேலத்திற்குமான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் பழனிசாமி சாலை வழிப்பயணங்களில் சேலத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதற்கு முன்பே மருத்துவர்கள் சாலைவழிப் பயணங்களால் குடலிறக்கம் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சாதாரண பரிசோதனைக்குச் சென்றுள்ளார்.

Advertisment