அண்ணா பல்கலை. மாணவிக்கு நடந்த பாலியல்வன்கொடுமையைகண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் எஃப்.ஐ.ஆரில்கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மாணவியிடம் அத்துமீறும் போதுசெல்போனில்சார் வேறு ஒரு நபருடன்பேசியதாககூறப்பட்டுள்ளது.
இதனையும் குறிப்பிட்டு அதிமுகவினர் யார் அந்த சார்?’ என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றியில் யார் அந்த சார்?’ என்ற பதாகைகளுடன்அதிமுகவைசேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீதுபோலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் ‘யார் அந்த SIR’ என்ற கேள்வியுடன், #SaveOurDaughters என்ற விழிப்புணர்வு வாசகத்துடன், சென்னையில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் மக்களிடையே மிகவும் அமைதியாக, ஒழுக்கத்துடன் கவன ஈர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக ஐடிவிங் பிரிவைசேர்ந்தஇளைஞர்களைகண்டு பதற்றம் அடைந்த ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடுவழக்குப்பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம். தேசிய ஊடகம் வரை கவனத்தை ஈர்த்து, பொதுமக்களின் பேராதரவை அஇஅதிமுக-வின்போராட்டங்கள் பெறுவதும், இந்த திமுக அரசின்பொய்முகங்கள்தோலுரிவதும், ஸ்டாலினின்அரசுக்குபதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கு குறித்த ஒரு முக்கியமான கேள்வியையும், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பொதுமக்கள் கூடும் இடத்தில், எவ்வித இடையூறும் இன்றி சமூக அக்கறை கொண்டு அறவழியில் மேற்கொண்ட அதிமுகஐடிவிங்பிரிவு இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பரமாடல்ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட இவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என திமுக-வின்ஸ்டாலின்மாடல்அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.