Advertisment

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத்தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

Advertisment

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Advertisment

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Thirumavalavan Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe