கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் காணொலி மூலம், 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவுகள் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் கரோனாதடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இரு மாநில முதல்வர்களும் கலந்து ஆலோசித்துக் கொண்டனர். இந்த ஆலோசனையில்தமிழகத்தில் ஒடிசா தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஒடிசா முதல்வர் கேட்டு அறிந்ததாகவும்தகவல் வெளியாகியுள்ளது.