Edappadi Palanisamy's car incident admk leader police

Advertisment

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் வாகனங்களை மறித்து, அமமுகவினர் உள்ளிட்டோர் கற்கள், கட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்அதிமுக நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அதிமுகநிர்வாகி மாறன் என்பவர், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், அமமுகவின் பொதுச்செயலாளர் தினகரனின் தூண்டுதலின் அமமுகபொறுப்பாளர்கள் சிலர் கையில் ஆயுதங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் காருக்கு வழிவிடாமல் மறித்து, முற்றுகையிட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும், கற்கள், காலணிகள், கம்புகளைக் கொலைவெறியோடு வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும்குறிப்பிட்டுள்ளார்.

சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி பயங்கர ஆயுதங்களுடன் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு அளித்திருக்கும் புகாரில் மாறன் தெரிவித்துள்ளார்.