தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த 11ஆம் தேதி வரை பெரும் மழை பெய்தது. இதனால், சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி, பல்வேறு குடியிருப்புகளிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால், பல பகுதிகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளானர். இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, புழல் காவாங்கரை பகுதியிலுள்ள திருநீலகண்டன் தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.