வாக்கு செலுத்த வரிசையில் நின்ற எடப்பாடி பழனிசாமி! 

Edappadi Palanisamy standing in line to vote!

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதுதொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும்என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிமுகவின் முதல்வர் வேட்பளாரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம்சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்துவதற்காகவரிசையில் நின்றார். அங்கு கரோனாதடுப்பு நடவடிக்கையாக சமூகஇடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

edapadi edappadi pazhaniswamy tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe