Advertisment

செந்தில் பாலாஜியா? மாஃபா பாண்டியராஜனா? எடப்பாடி பேசியது யாரை?

senthil balaji

கரூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா அண்மையில் சென்னையில் நடைப்பெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆதாயத்துக்காக அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என பேசியிருந்தார்.

Advertisment

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு செந்தில்பாலாஜிக்கு எதிரானது இல்லை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

பாண்டியராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தபோது, பாஜகவில் இருந்தபோது, அங்கு என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை. அங்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதால் கட்சி மாறியதாக கூறினாராம், இதனை மனதில் வைத்துதான், இணைப்பு விழாவில் செந்தில்பாலாஜியை தாக்குவதுபோல் பாண்டியராஜனை தாக்கி பேசினார் என்கின்றனர்.

கூவத்தூர் முகாமில் கடைசி வரை ஓ.பி.எஸ்.ஸை திட்டிக்கொண்டு, கடைசி நேரத்தில் பாஜக சொன்னதன் பேரில் ஓ.பி.எஸ்.ஸோடு இணைந்தவர்தான் பாண்டியராஜன். அந்த கோபமும் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு தீரவில்லை என்றும் பேசிக்கொள்கின்றனர்.

edappadi pazhaniswamy senthil balaji Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe