கரோனா தடுப்பில் இந்திய மரபு முறை மருத்துவம் பற்றி மருத்துவ வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

edappadi palanisamy Speech about Doctors

Advertisment

மருத்துவ வல்லுநர்களுடன் காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது. இரவு, பகலாகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உளமார்ந்த நன்றி; அவர்களுக்கு அரசு முழு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து அதிகம் பேர் குணமடைந்துள்ளனர்; மருத்துவர் பணிசிறக்க வாழ்த்துகள்" என்றார்.

இதனிடையே காணொளியில் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்கதமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா, கரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூபாய் 50 லட்சம் தரப்படும் என அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisment