
வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனக் களத்தில் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. திமுக சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதேபோல்அதிமுகசார்பிலும்முதல்வர் எடப்பாடி பழனிசாமிதொடர்ந்து தேர்தல் பிரச்சாரசுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதாபிறந்தநாளான பிப்.24 ஆம் தேதி, ஜெயலலிதா வெற்றிபெற்றஆர்.கே.நகர் தொகுதியில்ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்று மட்டுமில்லாமல் பிப்.28 ஆம் தேதி மற்றும் மார்ச் 1, 2ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாபிறந்தநாளான பிப்.24 ஆம் தேதி தேனி மாவட்டம் போடியில்நடைபெறும்பொதுக்கூட்டத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)