Advertisment

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. அதனால் கடந்த நான்கு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார்கள். அதேபோல், சென்னை வால்டாக்ஸ் சாலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு நிவாரணஉதவிகளை வழங்கினார்.