அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், அதிமுகவில் சீட்டு கிடைக்கவில்லை என்றபோது ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்டு ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

edappadi palanisamy paid tribute Venkatasalam memorial

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இவர், கடந்த 2010-ம் ஆண்டு அவரது வடகாடு கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கொலைக்கான உண்மை காரணங்களும், காரணமானவர்களையும் கைது செய்யவில்லை என்று அவரது உறவினர்கள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இரவு தங்குவதற்காக புதுக்கோட்டை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழிச்சாமி வடகாட்டில் மாஜி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழச்சியி்ல் வெங்கடாசலம் உறவினர்கள் கலந்து கொண்டனர்.