Skip to main content

கடலூர்: கட்சி நிர்வாக பணிகளுக்காக மூன்று நிர்வாகிகளை நியமித்த அதிமுக!

Published on 09/11/2019 | Edited on 14/11/2019

கடலூர் மாவட்டம் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியில் கடலூர் மாவட்டத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டமாக பிரித்து கட்சி பணிகளை செய்து வந்தனர். கிழக்கு மாவட்டத்திற்கு தற்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத் மாவட்ட செயலாளராகவும், மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் கடலூர் எம்பியாக இருந்த அருண்மொழிதேவன் மாவட்டசெயலாளராக இருந்து வந்தனர். அருண்மொழிதேவனுக்கும், அமைச்சர் சம்பத்துக்கும் கோஷ்டி பூசல் அதிமானதால் சம்பத் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அருண்மொழிதேவன் ஆதரவாளர்களான சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி முருகுமாறன், பண்ருட்டி தொகுதி சத்யாபன்னீர்செல்வம்,விருத்தாச்சலம் கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் புறக்கணித்து வந்தனர். இந்த பிரச்சனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வரை சென்று பேசிமுடிக்கப்பட்டது.

 

 Edappadi Palanisamy, OPS, which divided the Cuddalore district into three

 

இதனைதொடர்ந்து அமைச்சர் சம்பத் வகித்துவந்த கனிமவளத்துறையை சட்டஅமைச்சராக உள்ள சிவி சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பாக மாற்றப்பட்டு அவரை டம்மியாக்கினார்கள். அதன்பிறகும் அவர்களது கோஷ்டி மோதல் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் ஆகியோர் கடலூர் மாவட்டத்தை அதிமுக கட்சியில் மூன்றாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியனை தேர்வு செய்துள்ளர். இவர் அமைச்சர் சம்பத்திற்கு எதிர் அணியில் உள்ள அருண்மோழிதேவன் ஆதரவாளர். இவருக்கு சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி   ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 Edappadi Palanisamy, OPS, which divided the Cuddalore district into three

 

அதேபோல் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் சம்பத்தை மத்திய மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளனர். இவர் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சட்டமன்ற தொகுதிகள் இவரது கட்டுபாட்டில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர். மேலும் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, வித்தாச்சலம் ஆகிய சட்டமன்றதொகுதிகளை மேற்கு மாவட்டமாக அறிவித்து மாவட்ட செயலாளராக அருண்மொழிதேவனே தொடர்ந்து உள்ளார்.

 

 Edappadi Palanisamy, OPS, which divided the Cuddalore district into three

 

அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக புதிய பதிவியை ஏற்றுள்ள எம்எல்ஏ பாண்டியன் முதல்வர் மற்றும் அதிமுக உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்களின் ஆசியை பெற்று சொந்த ஊரான சிதம்பரம் நகருக்கு வருகை தந்தார் இவரை தொகுதியின் எல்லையான பெரியப்பட்டில் அவரது ஆதரவாளர்கள் மேளதாள வானவேடிக்கை முழங்க வரவேற்று அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இவருக்கு மாற்று கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சால்வை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்திளார்களிடம் பேசிய பாண்டியன் சிதம்பரத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் பேசினேன். அதனை தொடர்ந்து சட்டஅமைச்சர் இதுகுறித்து ஆய்வுசெய்ய உத்திரவிட்டுள்ளார். அதனை தற்போது நேரிலும் அவரிடத்தில் பேசிவிட்டு வந்துள்ளேன். கண்டிப்பாக  அதுவிரைவில் நடக்கும் சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்றார்.

அதேநேரத்தில் அதிமுகவில்  கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்ததை கட்சியின் பல்வேறு தரப்பினர்‘ வரவேற்றாலும் அமைச்சர் சம்பத் தரப்பினருக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஆதரவாளர்கள் வெளிபடையாகவே பலரிடம் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் கடலூர் மாவட்டத்தில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 33 சதவீதத்திற்கு மேல் தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அரசியலில் அதிமுக, திமுக என இருகட்சிகளில்தான் அதிகம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திமுகவில் மாவட்டத்தை  கடலூர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் உள்ளார். மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏவாக இருந்த கணேசன் உள்ளார். இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தையும், தலித் சமூதாயத்தையும் சார்ந்தவர்களை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர. இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர்.  

ஆனால் தற்போது மாவட்டத்தை மூன்றாக பிரித்துள்ள அதிமுக மூன்று மாவட்ட செயலாளர்களையும் ஒரே சமூகத்தில் இருந்து நியமித்துள்ளனர். மாவட்டத்தில் 33 சதவீதத்திற்கு மேல் வசிக்கும் தலித் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஒருவரை கூட மாவட்ட செயலாளராக நியமிக்கவில்லை என்று அந்த சமூகத்தில் இருந்து அதிமுகவின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், கட்சியினர் என  பலர் நம்மிடம் ஆதங்கத்துடன் கூடிய வருத்ததுடன் பேசினார்கள்.

அதேபோல் சிறுபான்மை என்று சொல்லப்படுகிறவர்கள் மாவட்டத்தில் 15 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். அந்த சமூகதிலிருந்தும் ஒருவரை கூட நியமிக்கவில்லை என்றும் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் புலம்பி வருகிறார்கள்.

இதே அம்மா இருந்தா இப்படி நடக்குமா? என்ற கேள்வி எழுப்பியதுடன் சாதிய அடக்குமுறை அதிகமாக இருந்த காலத்திலும் ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்தபோது அம்மா தலித் சமூகத்தை சார்ந்தவரை மாவட்ட செயலாளராக நியமித்தார் என்பது குறிப்பிடதக்கது என்றனர். தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் கையில் கட்சி உள்ள நிலையில் கட்சியின் பதவி மற்றும் முக்கிய பொறுப்புகளில் சமூக நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.