ல

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்துக்கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று அறிவித்துள்ளது. திமுக தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதியை வைத்து ஆரம்பித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் கரோனா தாக்குதல், ஏழுவர் விடுதலை முதலியவை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், திடீர் திருப்பமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநருடன் சந்தித்து பேச உள்ளார். எழுவர் விடுதலை மற்றும் கரோனா நடவடிக்கை குறித்து அவர் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. எதற்காக இந்த சந்திப்பு என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் மாலையில் இந்த சந்திப்பு ராஜ்பவனில் நடைபெற உள்ளது.

Advertisment