லஞ்ச ஒழிப்பு சோதனை எதிரொலி... ஆளுநர் ஆர்.என். ரவியுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு!

ரகத

தமிழ்நாடுஆளுநர் ஆர்.என். ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று (20.10.2021) சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த சோதனை நேற்று முன்தினம் சி. விஜயபாஸ்கர் வரை தொடர்கிறது. முன்னாள் அமைச்சர்களிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், வருமானத்துக்கு அதிகாமான சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடைசியாக சி. விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 4.5 கிலோ தங்கம், 23 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவைச் சேர்ந்த புகாருக்குள்ளான பிற முன்னாள் அமைச்சர்கள் பீதியில் உள்ளனர். இதற்கிடையே, இன்று தமிழ்நாடுஆளுநர் ஆர்.என். ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளார். இதில் ரெய்டு தொடர்பாக புகார் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

edappadi pazhaniswamy tamilnadu governor
இதையும் படியுங்கள்
Subscribe