குழந்தைகளை பாதுகாக்க குழு... எடப்பாடி பழனிசாமியிடம் லதா ரஜினிகாந்த் வலியுறுத்தல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்.

 latha rajinikanth

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முதியவர்களுக்காக அரசில் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால் குழந்தைகளுக்கென ஒரு துறை மட்டும் இருந்தால் போதாது. மருத்துவம், கல்வி, சமூக பாதுகாப்பு ஆகியவை அடங்கிய குழு தேவைப்படுகிறது.

எனவே அவர்களை பாதுகாக்க மாநில அளவில் மருத்துவர்கள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள் என பல்துறை நிபுணர்கள், வல்லுனர்கள் அடங்கிய குழுவை உருவாக்குவது தொடர்பாக தெரிவித்தேன். மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டது. ஆழ்துளை கிணறு மட்டுமல்ல, இன்னும் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு உள்ளது. குழந்தைகள் நம்மை நம்பித்தான் உள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை அவர்களை கண்காணிக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு கூறினார்.

Edappadi Palanisamy latha rajinikanth Meet
இதையும் படியுங்கள்
Subscribe