Advertisment

கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி... ம.நீ.ம. துணைத் தலைவர் பதிலடி..

வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று ஓமலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisment

Dr Mahendran R

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

Advertisment

அரசியல் என்பது அனைத்து மக்களுக்கும் நல்லதை, நேர்மையாக செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகன்களின் உரிமை, கடமை மற்றும் பொறுப்பு. அதை ஒரு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பவர்கள், எங்கள் தலைவர் கமல்ஹாசனைப் போன்ற நேர்மையானவர்களை கண்டு பயப்படுவது நியாயம் தான். நமக்கு வேலை நிறைய இருக்கிறது. இவர்களுக்கு பதில் சொல்வது கால விரயம். இணைவோம்! எழுவோம்! நாளை நமதே ! நிச்சயம் நமதே !! என குறிப்பிட்டுள்ளதோடு, ‘கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி’ என்று ஹேஷ்டேக்கைப் பதிவிட்டுள்ளார்.

Edappadi Palanisamy mahendran MNM Reply Vice President
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe